பார்த்த ‘24’
பல கற்பனை கலந்த விஷயங்களில ஒன்று ‘டைம்
மிஷின்’ (காலம் கடக்க உதவும் இயந்திரம்).எனக்கு ரொம்ப பிடிச்ச கான்சப்ட். படம், கார்ட்டூன், டாக்குமெண்டரின்னு ஒன்னை விடமாட்டேன்.2015
வரை டைம் மிஷின் இருந்தா இதை செய்வேன் அதை செய்வேன்னு கற்பனை பன்னிட்டு
இருப்பேன்.ஆனா இப்ப அதனால நடக்கும் மாற்றத்தினால இப்ப நடக்கும்
நல்லதெல்லாம் மறஞ்சிபோய்டும்னு நினைச்சேன் 2016 ஆரம்பத்தில இருந்து
டைம் மிஷின் வேண்டாம்னு கற்பனையில தூக்கி எறிஞ்சிட்டேன்.அந்த
நேரம் தான் 24 ரீலிஸ் ஆச்சி.குடும்பத்தோட
ஞாயிறு போனேன்.அம்மா,சித்தி,தங்கச்சிக,தம்பின்னு எல்லாரும் ரசிச்சாங்க.சூர்யாவுக்கு வயசு ஏற ஏற அழகு கூடிக்கிட்டே போகுது. ‘மெய் நிகரா’ பாட்டு ரொம்ப பிடிச்சிருந்தது.பிற்பாதில வில்லன் சூர்யா போடற ஐடியா ‘அட’ போட வச்சிசு.சமந்தாவையும்,நித்யா
மேனனையும் அழகா காட்டியிருக்காங்க.உடைங்க எல்லா கதாப்பாத்திரத்துக்கும்
அழகாவும் இருக்கு, பொருந்தியும் இருக்கு.ஒரு ரசிகையா இருந்து எனக்கு ப்ளஸ்,மைனஸ் விஷயங்கள்.
ப்ளஸ்:
1) சூர்யா சூர்யா சூர்யா படம் பூராவும் சூர்யா-அந்த வில்லன் கதாபாத்திரத்திற்காகவே இன்னோரு முறை பார்க்கலாம்.
2) கண்ணுக்கு குளிச்சியான கெமிரா ஆங்கள்- படம்
திரைல பார்க்க ரொம்ப அற்புதமான இருக்கு,பாட்டுல வர இடங்கள் சூப்பர்
(போலந்து)
3) ஏ.ஆர்.ரஹ்மானின் நல்ல
பின்னனி இசை
4) தமிழுக்கு கொஞ்சம் நல்ல திரைக்கதை கொண்ட டைம் மிஷின் கதை
மைனஸ்:
1) தேவையில்லாத கடைசி பாட்டு
2) க்ளைமெக்ஸ்க்கு முன்னாடி வர பத்திருபது சீன் கொஞ்சம் நத்தை.
3) டைம் மிஷின்ல நான் லாஜிக் பார்க்கல, பார்க்கக்கூடாது,
ஆனா பிற்பாதி கதையில கொஞ்சம் லாஜிக் மிஸ்ஸிங்.
4) இரண்டு கதாநாயகிகளும் மனசுல நிக்கல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக